Wednesday, July 22, 2009

Fwd: ♥ : Fwd: [muththamiz] நாளை சூரிய கிரகணம்


நாளை சூரிய கிரகணம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நாளை (22-07-2009) புதன்கிழமை ஏற்படப்போகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் பூமியின் சில பகுதிகளில் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிழல் காரணமாக பகலிலேயே இருள் ஏற்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது.

நாளை புதன்கிழமை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இதுவே இந்த 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும்.

அதிகாலை 05.28 நிமிடத்திற்குத் துவங்கும் இந்தக் கிரகணம், காலை 10 மணி 42 நிமிடங்கள் வரை நீடிக்கும். நாளைக் காலை நிகழவிருக்கும் இச் சூரியகிரகணத்தை இலங்கையிலும் மலேசியாவிலும் காணக்கூடியதாக இருக்கும்.

இலங்கையில் அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இச் சூரியகிரகணத்தை 7.34 மணி வரை காணக்கூடியதாக இருக்கும். எனினும் வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்த்தால் கண் விழித்திரை பாதிப்படையும்.


சீனாவில் 6 நிமிடம் சூரிய கிரகணம் இருக்கும். கடைசியாக, 1999 ம் ஆண்டு முழு சூரிய கிரகணம் தெரிந்தது. ஜுலை 22 ம் திகதி கிரகணம் தான், இந்த தலைமுறையினர் பார்க்கும் கடைசி நீண்ட முழு சூரிய கிரகணம். இதன் பின்னர் 2034 இல் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால், இது போன்ற நீண்ட முழு சூரிய கிரகணம் இன்னும் 123 ஆண்டுகளுக்குப் பின் 2132 இல் தான் நிகழும்.

சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்த்தால், சூரிய ஒளி விழித்திரையில் குவிந்து புண்ணாக்கிவிடும். இதனால் பார்வை பறிபோகும். முழு சூரிய கிரகணத்தின் போது திடீரென்று இருள் கவ்வும். அப்போது சூரியனை நாம் பார்க்கும் போது நமது பார்வை 3 மடங்கு பெரிதாகி இருளை பார்க்கும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி 10 மடங்கு அதிகம் பாய வழிவகுக்கும். இச் சூழலில் முழு சூரிய கிரகணம் முடிந்து திடீரென்று ஒளி வெளி வருவதை கண்கள் பார்க்க நேரிட்டால், மேலும் 10 மடங்கு சூரிய ஒளி கண்ணுக்குள் திடீரென்று பாய்ந்து கண் பார்வையை பாதித்துவிடும். எனவே, சூரியனை வெறும் கண்ணால் நேரடியாக பார்க்க கூடாது.

தண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையும் பார்க்க கூடாது. டெலஸ்கோப், பைனாகுலர், எக்ஸ்ரே பிலிம் மூலமும் பார்க்கக் கூடாது. மைலார் கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.
Posted by எம்.ரிஷான் ஷெரீப்


0 comments:

Post a Comment

 

Tags

Blog Archive

Site Info

Followers

pick beauty Copyright © 2010 Blogger Template Sponsored by Trip and Travel Guide